/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆமை' வேகத்தில் கட்டுமானப்பணி அல்லாளபுரத்தில் 'அல்லல்'படும் மக்கள்
/
'ஆமை' வேகத்தில் கட்டுமானப்பணி அல்லாளபுரத்தில் 'அல்லல்'படும் மக்கள்
'ஆமை' வேகத்தில் கட்டுமானப்பணி அல்லாளபுரத்தில் 'அல்லல்'படும் மக்கள்
'ஆமை' வேகத்தில் கட்டுமானப்பணி அல்லாளபுரத்தில் 'அல்லல்'படும் மக்கள்
ADDED : மே 04, 2024 11:06 PM

பல்லடம்;பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அல்லாளபுரம் -- பொங்கலுார் செல்லும் வழித்தடத்தில், அல்லாளபுரம் குட்டை மற்றும் நீரோடை உள்ளது.
இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி செல்லும்போது, தடுப்பணை நிறைந்து நீரோடை வழியாக செல்வது வழக்கம். இவ்வாறு, செல்லும்போது, இங்குள்ள தரைமட்ட பாலம் மூழ்கி வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, புதிய பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதன்படி, கடந்த டிச., மாதம், 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.
பாலம் கட்டுமான பணி காரணமாக, வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில், 'பொங்கலுார், பல்லடம், திருப்பூர், கணபதிபாளையம், உகாயனுார், பொல்லிக்காளிபாளையம் ஆகிய பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வழித்தடத்தில் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அல்லாளபுரம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது.
இதற்காக, தினசரி திருப்பூர், பல்லடம், பொங்கலுார் பகுதி சந்தைகள் மற்றும் மார்க்கெட்டிற்கு செல்ல இந்த வழித்தடம் பிரதானமாக உள்ளது. பாலம் கட்டுமான பணி மந்தமாக நடப்பதால், மாற்று வழி பயன்படுத்தி செல்ல தாமதமாகிறது. எனவே, பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்றனர்.