ADDED : ஜூன் 25, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தொழிலாளர் துறை சார்பில், நுகர்வோர் நலன் சார்ந்து குறை கேட்பு காலாண்டு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நுகர்வோர் கூட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.