/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இந்தியாவில் கன்டெய்னர் நிறுவனம் திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
/
இந்தியாவில் கன்டெய்னர் நிறுவனம் திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
இந்தியாவில் கன்டெய்னர் நிறுவனம் திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
இந்தியாவில் கன்டெய்னர் நிறுவனம் திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 07, 2024 01:49 AM
திருப்பூர்;'சீனா உள்ளிட்ட சில நாடுகளை சார்ந்திருக்கும் நிலைமாற, இந்தியாவில் கன்டெய்னர் சேவை நிறுவனம் துவக்கப்பட வேண்டும்,' என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்றுமதி வர்த்தகம் என்பது, கப்பல் சரக்கு போக்குவரத்து சார்ந்ததாக இருக்கிறது.
ஏற்றுமதி சரக்கு பரிவர்த்தனையில், கன்டெய்னர் பயன்பாடு அத்தியாவசியமானது.
இந்தியாவில், கன்டெய்னர் சேவைக்காக ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும், சீனாவை சேர்ந்த நிறுவனங்களை சார்ந்திருக்கிறோம். வர்த்தக வளர்ச்சியை கருத்தில்கொண்ட தொழில்துறையினர், கன்டெய்னர் சேவை தொழிலில் கால்பதிக்கவில்லை.
சர்வதேச கப்பல் போக்குவரத்தில், சில நிறுவனங்கள் வைத்ததே சட்டம் என்பது போல் மாறிவிட்டது. இந்தியாவை பொறுத்தவரை, ஜூன், ஜூலை, ஆக., மாதங்களின் ஏற்றுமதி அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, சரக்கை கப்பலிட தேவையான கன்டெய்னர் கிடைக்காமல், தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்து திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், 'சீனாவின் சில நிறுவனங்களே, ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்துக்கான கன்டெய்னர் சேவையை வழங்குகின்றன. இந்நிலை மாற வேண்டும்; குறிப்பிட்ட நாட்டை மட்டும் சார்ந்திருக்க கூடாது. எதிர்காலத்தில், ஏற்றுமதி மேலும் வளர்ச்சியடையும் என்பதால், இந்தியாவிலேயே, கன்டெய்னர் சேவை நிறுவனங்கள் துவக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த தொழில்துறையினரும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்,' என்றனர்.