/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்: ஜி.எச்.,ல் பணிகள் பாதிப்பு
/
ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்: ஜி.எச்.,ல் பணிகள் பாதிப்பு
ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்: ஜி.எச்.,ல் பணிகள் பாதிப்பு
ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்: ஜி.எச்.,ல் பணிகள் பாதிப்பு
ADDED : மே 26, 2024 11:15 PM
உடுமலை;உடுமலை அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மீண்டும் போராட்டத்தில், ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை அரசு மருத்துவமனையில், துாய்மைப்பணி உள்ளிட்ட பணிகளுக்காக, 40 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவமனை வளாகத்தில், கடந்த 24ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அரசு நிர்ணயித்தபடி, நாளொன்றுக்கு, 610 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; பி.எப்., தொகையை முழுமையாக செலுத்தி, ஆவணங்களை தர வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தற்காலிக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, பணியாளர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று மாலை வரை தற்காலிக பணியாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இதனால், அரசு மருத்துவமனையில், பணிகள் பாதித்தது.

