/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேரழுகலை கட்டுப்படுத்தினால் முள்ளங்கியில் கூடுதல் லாபம்
/
வேரழுகலை கட்டுப்படுத்தினால் முள்ளங்கியில் கூடுதல் லாபம்
வேரழுகலை கட்டுப்படுத்தினால் முள்ளங்கியில் கூடுதல் லாபம்
வேரழுகலை கட்டுப்படுத்தினால் முள்ளங்கியில் கூடுதல் லாபம்
ADDED : பிப் 21, 2025 11:02 PM
உடுமலை; வேரழுகல் நோயை கட்டுப்படுத்தினால், முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் லாபம் பெற வாய்ப்புள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, மலைப்பகுதியில் மட்டும் அதிகம் விளையும் சில காய்கறிகளையும் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், முள்ளங்கி சாகுபடி இப்பகுதியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: முள்ளங்கி சாகுபடியில், சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளைத்துரு நோய், வேரழுகல் உட்பட நோய்த்தாக்குதல்கள் ஏற்படும். நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
வெள்ளைத்துரு நோய் வராமல் தடுக்க விதைகளை, 'திராம்' மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
நோய் பாதிக்கப்பட்ட கிழங்கின் மையப்பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் கிழங்கில் குழிகள் தோன்றுகின்றன.
இதனால், செடிகள் வாடிவிடும். விதை உற்பத்திக்காக கிழங்கை நடும்போது இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
எனவே கிழங்கை நடும்முன் அவற்றை, 'அகரிமைசின்' என்ற உயிர் எதிர்க்கொல்லியை ஒரு லிட்டருக்கு, 100 மில்லி கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீரில் நனைத்து நடவேண்டும். இதனால், வேரழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். விதைத்த 45 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகி விடும்.களைக்கொத்திகள் மூலம் மண்ணைக் கொத்தி செடிகளை வேருடன் பிடுங்கி எடுக்கவேண்டும். இம்முறைகளை பின்பற்றினால், ெஹக்டேருக்கு, 45--60 நாட்களில், 20 முதல் -30 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.