/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூடப்பட்ட வழித்தடம்; அருள்புரத்தில் சர்ச்சை?
/
மூடப்பட்ட வழித்தடம்; அருள்புரத்தில் சர்ச்சை?
ADDED : ஜூலை 04, 2024 05:03 AM

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம்- சேகாம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் உள்ள வீதி ஒன்றை இப்பகுதி பொதுமக்கள் வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழித்தடம் சேகாம்பாளையம் சாலையுடன் உப்பிலிபாளையம் செல்லும் சாலையை இணைப்பதாக உள்ளது. இங்கு, ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக, திடீரென இந்த வழித்தடம் மூடப்பட்டது. கற்கள், மரங்கள் வைத்து சிலர் பாதையை தடுத்துள்ளதாக இப்பகுதியினர் கூறினர்.
இது குறித்து கரைப்புதுார் வி.ஏ.ஓ., கவுரியிடம் கேட்டதற்கு, 'இப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலம் இங்கு உள்ளது. அதனைத் தான் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குடிபோதையில் வந்து, இப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், வழித்தடத்தை மூடியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டு வழித்தடத்தில் உள்ள கற்கள், மரங்கள் அகற்றப்படும்,'' என்றார்.