/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்: வெயிலின் தாக்கம் குறைந்தது
/
குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்: வெயிலின் தாக்கம் குறைந்தது
குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்: வெயிலின் தாக்கம் குறைந்தது
குளிர் சீதோஷ்ண நிலை துவக்கம்: வெயிலின் தாக்கம் குறைந்தது
ADDED : மே 12, 2024 11:21 PM

உடுமலை;உடுமலையில், ஒரு சில பகுதிகளில் குளிர் சீதோஷ்ண நிலை துவங்கியுள்ளதோடு, வெயிலின் தாக்கமும் குறைந்துள்ளது.
உடுமலை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், கடந்தாண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் குறைந்தளவே பெய்தன.
நடப்பாண்டு, ஜன., - பிப்., மாத குளிர் கால மழையும் ஏமாற்றியது. மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழையும் ஏமாற்றியதோடு, வெயிலின் தாக்கமும் கடுமையாக அதிகரித்தது.
இதனால், கடும் வறட்சியும், வேளாண் சாகுபடி பணிகள் பாதித்ததோடு, தென்னை, கரும்பு, நெல், காய்கறி என நிலைப்பயிர்களுக்கு நீர் இல்லாமல் காய்ந்தன.
இந்நிலையில், கோடை கால பருவ மழை, இறுதியில் துவங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒரு சில பகுதிகளில், கன மழை முதல் மிதமான மழை பெய்தது.
இதனால், ஒரு சில பகுதிகளில் குளிர் சீதோஷ்ண நிலை துவங்கியுள்ளதோடு, வெயிலின் தாக்கமும் குறைந்துள்ளது.