/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளி மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி: சுவரைச் சூழ்ந்த தண்ணீர்
/
மாநகராட்சி பள்ளி மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி: சுவரைச் சூழ்ந்த தண்ணீர்
மாநகராட்சி பள்ளி மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி: சுவரைச் சூழ்ந்த தண்ணீர்
மாநகராட்சி பள்ளி மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி: சுவரைச் சூழ்ந்த தண்ணீர்
ADDED : ஆக 30, 2024 10:38 PM

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 500க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளிக்கு பின்புறம் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியத்தின், குடிநீர் 'பம்பிங் ஸ்டேஷன்' செயல்படுகிறது.
பல லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைத்து, அழுத்தம் கொடுத்து அனுப்புவதற்கு ராட்சத கேட்வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக அழுத்தம், ஆண்டுக்கணக்கில் போதிய பராமரிப்பு இல்லாததால், ஐந்துக்கும் மேற்பட்ட கேட்வால்வுகள் பழுதாகி, தொடர்ந்து, 24 மணி நேரமும் குடிநீர் கசிந்து வீணாகிறது. பள்ளி வகுப்பறைச் சுவரை ஒட்டிய புதர்மண்டி காணப்படுவதால், தண்ணீர் வெளியேறிச் செல்ல வழியில்லை.
பள்ளி வகுப்பறைச் சுவர் அருகே இரண்டு அடி உயரத்துக்கு தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளி வகுப்பறைகள் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு மேலாக இப்படியே தண்ணீர் நிற்பதால், அஸ்திவாரம், வகுப்பறை சுவர் பலமிழக்கும் அபாயம் உள்ளது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி கூறுகையில், '' மண்டல மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்து விடும் நிலை உள்ளது. பம்பிங் ஸ்டேஷனில் இருந்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என்றார்.
---
குடிநீர் 'பம்பிங் ஸ்டேஷன்' கேட்வால்வில் இருந்து தண்ணீர் கசிந்து, பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிச் சுவரை, சூழ்ந்து நிற்கிறது. இதனால், சுவர் பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.