/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டன் மார்க்கெட்கடைகள் ரகசிய ஏலம்; நுகர்வோர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

ADDED : செப் 05, 2024 12:37 AM

திருப்பூர் : ஒழுங்கு முறை விற் பனைக் கூட வளாகத்தில் கட்டிய கடைகள் எந்த விதமான அறிவிப்பும் இன்றி ரகசியமாக ஏலம் நடந்துள்ளதாக, நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முக சுந்தரம் கூறியதாவது: திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட (காட்டன் மார்க்கெட்) வளாகத்தில் தற்காலிகமாக தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. இவ்வளாகத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில், ஒரு ஷெட் கட்டி, 20 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய கடைகள் கட்டு வதாக நிர்வாகம் தெரிவித்தது.
தற்போது, எந்த அறிவிப்பு மற்றும் தகவல் இல்லாமல் திடீரென குறிப்பிட்ட சில வியாபாரிகளை மட்டும் அழைத்து இந்த கடைகளை ஏலம் விட்டுள்ளனர்.
அதில், பூக்கடைகள் திறக்கும் வகையில் ஏற்பாடு நடப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து விளக்கம் பெற ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளர் துரைராஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்.
பின் தொடர்பு கொள்கிறேன்,' என்று மட்டும் கூறி இணைப்பை துண்டித்தார்.