/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு; உடுமலை அரசு கல்லுாரியில் துவக்கம்
/
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு; உடுமலை அரசு கல்லுாரியில் துவக்கம்
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு; உடுமலை அரசு கல்லுாரியில் துவக்கம்
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு; உடுமலை அரசு கல்லுாரியில் துவக்கம்
ADDED : மே 28, 2024 11:31 PM

உடுமலை:உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கியுள்ளன.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டில், 864 இடங்களுக்கு சேர்க்கை நடக்கிறது. சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கியது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8 பேர், 'ஏ' சான்றிதழ் பெற்ற தேசிய மாணவர் படை உறுப்பினர் ஒருவரும் என, மொத்தமாக, 9 மாணவர்கள் இப்பிரிவின் கீழ், நேற்று கலந்தாய்வின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று கலந்தாய்வை தவற விட்ட மாணவர்கள், இன்று பங்கேற்கலாம். இன்று மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முதன்மையாக நடக்கிறது.
சேர்க்கைக்கு வரும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,2 சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்திலும் மூன்று நகல்கள், அவற்றின் அசல் மற்றும்
விளையாட்டு பிரிவின் கீழ் பங்கேற்போர், அதற்கான அசல் சான்றிதழ்கள் அவற்றின் நகல்கள், மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் உள்ளிட்ட அனைத்தும் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.