/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தம்பதியர் பேட்டி: குழந்தைகளுக்கு பெரியவர்களின் உதவி, கவனிப்பு கட்டாயத் தேவை

ADDED : செப் 16, 2024 12:13 AM

திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர், பிரபு; செஞ்சேரிப்புத்துார் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் மகேஸ்வரி; இருவரும் தம்பதியர்; திருப்பூர், மங்கலம் ரோட்டில் வசிக்கின்றனர்.
பிரபு - மகேஸ்வரி கூறியதாவது:
தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்வதால், பொருளாதாரத்தில் மேம்பாடு அடையமுடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை, சமூகத்தில் நல்ல மரியாதை அதிகரிக்கும். அதே சமயம் குடும்பத்தாருடன் செலவிடும் நேரம் குறையும். குழந்தைகள் வளர்ப்பு என்பது மிகப் பெரும் சவாலாக இருக்கும். உடல் நலத்தைக் கூட சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாது. வேறு ஊர்களில் பணியாற்றி ஒரே இடத்தில் வசிப்பது கூடப்பரவாயில்லை. வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றுவோர் நிலை மிகவும் சிரமம்.குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் பெரியவர்கள் உதவி மற்றும் கவனிப்பு கட்டாயம் தேவையாக உள்ளது. பள்ளிப் பாடங்களைக் கற்றுத் தர, படிக்க வைக்க பெற்றோர் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகின்றனர். அதே போல் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவர்கள் தேவைகளை அறிந்து, அதை நிறைவேற்றவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் பெற்றோர்கள் அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும்.