UPDATED : செப் 10, 2024 03:02 AM
ADDED : செப் 10, 2024 02:35 AM

திருப்பூர்:திருப்பூர் வடக்கு குறுமைய மாணவ, மாணவியர் தடகள போட்டி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர், பூலுவப்பட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வடக்கு குறுமைய போட்டிகளை, நடத்தி வருகிறது. அதில், நேற்று மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள் நடந்தன.
மாணவியர் பிரிவு தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
பதினேழு வயது பிரிவு, 1,500 மீ., ஓட்டத்தில் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அனன்யா முதலிடம். அதே பள்ளி மாணவி தர்ஷினி, 2வது இடம், ஜெய்வாபாய் பள்ளி கோபிகா மூன்றாமிடம். 19 வயது நீளம் தாண்டுதல் முதலிடம் மீனகா (ஜெய்வாபாய் பள்ளி), இரண்டாவது இடம் புனிதா, (அனுப்பர்பாளையம் அரசு பள்ளி), 3வது இடம் லக் ஷனா (இன்பான்ட் ஜீசஸ் பள்ளி). 19 வயது வட்டு எறிதலில் முதலிடம் ராகவர்த்தினி (ஜெய்வாபாய் பள்ளி), 2வது இடம் பூர்ணாஸ்ரீ (ஸ்ரீசாய் மெட்ரிக்), 3வது இடம் நிகிலா (ஜெய்வாபாய் பள்ளி).
பத்தொன்பது வயது பிரிவு, 1,500 மீ., ஓட்டத்தில் முதலிடம் தனுஷ்கா (ஜெய்வாபாய் பள்ளி), 2வது இடம் சுடர் சஹானா (ஜெய்சாரதா பள்ளி), 3வது இடம் தனுஷ்கா (திருமுருகன் மெட்ரிக்). 19 வயது பிரிவு, 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பவித்ரா, 2வது இடம் யாழினி (அனுப்பர்பாளையம் அரசு பள்ளி), 3வது இடம் பிரியங்கா (திருமுருகன் மெட்ரிக்). 400 மீ., ஓட்டத்தில், 14 வயது பிரிவில் முதலிடம் ஜெனிதா (ஜெய்வாபாய் பள்ளி).
போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள், வீரர், வீராங்கனையர் எண்ணிக்கை அதிகம் என்பதால், மீதமுள்ள போட்டிகள், இன்று நடக்குமென அறிவிக்கப்பட்டது.
