sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தண்ணீருக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன்கள்!

/

தண்ணீருக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன்கள்!

தண்ணீருக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன்கள்!

தண்ணீருக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன்கள்!

1


ADDED : செப் 10, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 10, 2024 02:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடைந்த தொட்டி

திருப்பூர், மாட்டுச்சந்தை மைதானத்தில் மாடுகளுக்கு தண்ணீர் ஊற்றி வைக்கும் தொட்டி உடைந்துள்ளது. தண்ணீர் வெளியேறுவதால், தொட்டியை சரிசெய்ய வேண்டும்.

- சங்கர், அமராவதிபாளையம். (படம் உண்டு)

சுற்றிலும் முட்புதர்

கருவம்பாளையம், ஏ.பி.டி., ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சுற்றிலும் முட்புதர் மண்டியிருப்பதால் பயன்படுத்த சிரமமாக உள்ளது.

- சண்முகசுந்தரம், கருவம்பாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

பல்லடம் - தாராபுரம் ரோடு, நான்கு வழிச்சாலை சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை குழியாகியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை கவனித்து சரிசெய்ய வேண்டும்.

- சண்முகநாதன், பல்லடம். (படம் உண்டு)

திருப்பூர், 5வது வார்டு, எஸ்.ஆர்.வி., நகர், ரேஷன் கடை அருகில், குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் தண்ணீர் வீணாகிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை.

- சங்கர், எஸ்.ஆர்.வி., நகர். (படம் உண்டு)

தென்னம்பாளையம், 60 அடி ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- சுசீலா, தென்னம்பாளையம். (படம் உண்டு)

சாலை சேதம்

திருப்பூர் பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் வேகத்தடை அருகே சாலை சேதமாகி, குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- விஜி, பூலுவப்பட்டி. (படம் உண்டு)

சுகாதாரக்கேடு

திருப்பூர், 51வது வார்டு, அரண்மனைப்புதுாரில் ரோட்டில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும்.

- மணிகண்டன், அரண்மனைப்புதுார். (படம் உண்டு)

ரியாக் ஷன்

சாலை சீரமைப்பு

திருப்பூர், பெருமாநல்லுார் - பூலுவப்பட்டி, பி.என்., ரோட்டில் சாலை சேதமானது குறித்து, 'தினமலர்' செய்தி வெளியானது. தற்காலிகமாக சாலையை சீரமைத்துள்ளனர்.

- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)

திருப்பூர் பெரிச்சிபாளையம், வினோபா நகரில் குழாய் பதிக்க குழி தோண்டி அப்படியே இருந்தது குறித்து 'தினமலர்' செய்தியால், குழியை மூடி சாலை அமைத்துள்ளனர்.

- கருப்புசாமி, வினோபா நகர். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us