/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ. 25 லட்சம் சுருட்டல் 'சைபர்' கும்பல் அடாவடி
/
ரூ. 25 லட்சம் சுருட்டல் 'சைபர்' கும்பல் அடாவடி
ADDED : மார் 11, 2025 05:31 AM
திருப்பூர் : திருப்பூரில், பங்கு சந்தையில் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, 25 லட்சம் ரூபாயை 'சைபர்' மோசடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த, 35 வயது மதிக்க நபர். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில மாதம் முன்பு தொடர்பு கொண்ட ஒருவர் பங்குசந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி நம்ப வைத்தார். இதன் காரணமாக, அவர் அனுப்பிய லிங்க் மூலமாக டெலிகிராம் குரூப்பில் இணைந்து, பங்கு சந்தை முதலீடு தொடர்பாக பணம் காட்டினார்.
ஆரம்பத்தில் கிடைத்த லாபத்தை நம்பி, பல்வேறு தவணைகளாக, 25 லட்சம் ரூபாயை கட்டினார். பின் பணத்தை எடுக்க முயன்ற போது, பல நிபந்தனை விதித்து, மீண்டும் பணம் கட்ட கூறினர். பின், ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.