/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு; பொதுமக்கள் போராட்டம்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு; பொதுமக்கள் போராட்டம்
ADDED : ஜூன் 12, 2024 10:42 PM
திருப்பூர் : ஊத்துக்குளி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியிக்கு உட்பட்ட, முகாசி பல்ேல கவுண்டன்பாளையம், எம்.தொட்டிபாளையம், தென்றல் நகர், சொட்ட கவுண்டன்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு, 45 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை.
நெடுஞ்சாலை ரோட்டில் நடந்துவரும் 'கெயில்' நிறுவனம் சார்பில் காஸ் குழாய் பதிப்பு பணியின் போது, குடிநீர் குழாய்கள் உடைந்ததால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம், பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நேற்று, ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி தலைவர் சரஸ்வதி ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில், குழாய் மறுசீரமைப்பு செய்து, மூன்று நாட்களுக்குள் குடிநீர் வினியோகிக்கப்படும். அதுவரை, டிராக்டர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
குடிநீர் வாரியம் மூலம், 'கெயில்' காஸ் குழாய் பதிக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள், மக்களுடன் இணைந்து போராடியதால், தீர்வு கிடைத்துள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.