ADDED : மே 24, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;பொங்கு பாளையம் ஊராட்சி, காளம்பாளையம் ஏ.டி காலனியை சேர்ந்தவர் சின்னான், இவரது மனைவி ராமாள், 68. இவர் தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ராமாள், வீடு பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. நேற்று அதிகாலை மேற்கூரை உடைந்து விழுந்தது. யாருக்கும் பாதிப்பு இல்லை.