/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைப்பாளையம் பாலம் ஒரு ஆண்டில் பணி முடியும்?
/
அணைப்பாளையம் பாலம் ஒரு ஆண்டில் பணி முடியும்?
ADDED : ஆக 16, 2024 11:16 PM
திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் வகையில், நொய்யல் மற்றும் ரயில் பாதையின் மீது மேம்பாலம் அமைக்க, கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. காலேஜ் ரோட்டில், வேலம்பாளையம் ரிங் ரோட்டில் இருந்து ரயில்ரோட்டை கடந்து, அப்படியே, நொய்யல் ஆற்றை கடந்து, அணைப்பாளையம் ரோட்டில் இறங்கும் வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன் மூலம் மங்கலம் ரோடும், காலேஜ் ரோடும் இணைக்கப்படும் வாய்ப்பு உருவானது. அணைப்பாளையமும் முக்கிய ரோடுகளுடன் இணைக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் பணிகள் பாதிக்கப்பட்டது.
கோர்ட் வழக்கு சுமூகமாக பேசி தீர்க்கப்பட்ட பின், திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், எம்.பி., சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், நேற்று பாலம் பணிகளை பார்வையிட்டனர்.
தற்போது அஸ்திவார பணி நடந்து வருகிறது; விரைவில் கான்கிரீட் அமைக்கப்படும்; அதிபட்சமாக, ஓராண்டுக்குள் பாலம் பணி நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

