ADDED : மே 23, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், கோட்டமங்கலம் சமத்துவபுரம் அருகே, அபாய வளைவு உள்ளது. வளைவையொட்டி, சமத்துவபுரம் பஸ் ஸ்டாப்பும், மறுபுறத்தில் குமாரபாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோடும் பிரிகிறது.
அவ்விடத்தில், பஸ்கள் நிறுத்தும் போதும், கிராம இணைப்பு ரோட்டுக்கு வாகனங்கள் திரும்பும் போதும், மாநில நெடுஞ்சாலையில், வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.
வளைவு பகுதியில், வாகனங்கள் நிற்பது தெரியாததால், இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது.
எனவே, அபாய வளைவு பகுதியில் தேவையான எச்சரிக்கை பலகைகள் வைத்து, ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.