/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான 'பள்ளம்'
/
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான 'பள்ளம்'
ADDED : மார் 03, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில், கோவை-- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி - -மைசூரு செல்லும் மாநில நெடுஞ்சாலை இணைகிறது. வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், ஆபத்தான 'பள்ளம்' உள்ளது. இதில், இப்பகுதியினர் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், இடது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றால், பள்ளத்தில் வாகனம் கவிழும் அபாயம் உள்ளது. ஆபத்தான பள்ளம் உடனடியாக மூடப்பட வேண்டும்.