/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெப்பக்குளத்தில் இறந்த மீன்கள் அறநிலையத்துறை 'அசட்டை'
/
தெப்பக்குளத்தில் இறந்த மீன்கள் அறநிலையத்துறை 'அசட்டை'
தெப்பக்குளத்தில் இறந்த மீன்கள் அறநிலையத்துறை 'அசட்டை'
தெப்பக்குளத்தில் இறந்த மீன்கள் அறநிலையத்துறை 'அசட்டை'
ADDED : மே 28, 2024 12:52 AM

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன. அவற்றை அப்புறப்படுத்த அறநிலையத்துறை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில், கடந்த இரண்டு ஆண்டாக தெப்பக்குளம் நிறைந்து உள்ளது. இதால், ஏராளமான மீன்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தெப்பக்குளத்தில் பெரிய மீன்கள் இறந்து மிதக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிக்காமல், மெத்தனப் போக்கில் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தெப்பக்குளத்தில் உள்ள மற்ற மீன்கள் பாதிக்கப்படாமல் காக்கவும், துாய்மை பணிகள் செய்து தெப்பக்குள தீர்த்தத்தின் புண்ணிய தன்மை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.