/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடை மூடல் என ஏமாற்று வாக்குறுதி தொடர் போராட்டம் நடத்த முடிவு
/
மதுக்கடை மூடல் என ஏமாற்று வாக்குறுதி தொடர் போராட்டம் நடத்த முடிவு
மதுக்கடை மூடல் என ஏமாற்று வாக்குறுதி தொடர் போராட்டம் நடத்த முடிவு
மதுக்கடை மூடல் என ஏமாற்று வாக்குறுதி தொடர் போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூன் 20, 2024 05:19 AM

திருப்பூர், :டாஸ்மாக் நிர்வாகம், வெற்று வாக்குறுதிகளால் காலம் கடத்தி மக்களை வஞ்சிக்க நினைத்தால், தொடர் போராட்டம் நடக்குமென, இ.கம்யூ., எச்சரித்துள்ளது.
திருப்பூர் பி.என்., ரோடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே உள்ள ரங்க நாதபுரம் 2வது வீதியில், டாஸ்மாக் மதுக்கடை (எண்:1909) செயல்பட்டு வருகிறது; கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென, தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டதன் எதிரொலியாக, நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி, ஐந்து மாதங்களுக்கு முன், கடை அகற்றப்படுமென, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறை திரும்ப பெறப்பட்டதும், மதுக்கடை மூடப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்திய கம்யூ., 2வது மண்டல குழுவின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், நேற்று டாஸ்மாக் அதிகாரிகளை சந்தித்து, இதுதொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், 'மதுக்கடையை மூடிவிடுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தொடர்ந்து ஏமாற்றி வருவது கண்டனத்துக்குரியது. பலமுறை பொதுமக்கள் வலியுறுத்தியும், அதிகாரிகள் செவிமடுக்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதியின்படி, பிரச்னைக்குரிய மதுக் கடைய மூட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம், இனியும் வெற்று வாக்குறுதிகளால் காலம் கடத்தி மக்களை வஞ்சிக்க நினைத்தால், தொடர் போராட்டம் நடக்கும்,' என்று தெரிவித்துள்ளனர்.