/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனிப்பு பதார்த்தங்களால் அம்மனுக்கு அலங்காரம்
/
இனிப்பு பதார்த்தங்களால் அம்மனுக்கு அலங்காரம்
ADDED : ஆக 02, 2024 11:42 PM

திருப்பூர்:ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டில், திருப்பூர், அணைக்காடு மாரியம்மன், இனிப்பு பதார்த்தங்கள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருப்பூர், அணைக்காடு மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நேற்று நடந்தன.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பால்கோவா கொண்டு அம்மன் முகமும்; மோதி லட்டு, பாதுஷா, ஜிலேபி, லட்டு, கேரட், பீட்ரூட் மைசூர்பா, அதிரசம் என, 55 கிலோ இனிப்பு பதார்த்தங்களைக் கொண்டு அம்மன் முழுமையாகஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோவில் அர்ச்சகர் குரு கூறுகையில், ''பக்தர்கள் விரும்பியபடி, அணைக்காடு மாரியம்மனுக்கு, தித்திக்கும் இனிப்பு பதார்த்த அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களும், ஆடிவெள்ளியில் அம்மனை தரிசித்து மகிழ்ச்சி அடைந்தனர்,'' என்றார்.