/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதியோர் இல்லத்தில் குறைபாடு; சட்டப்பணி குழு ஆய்வில் அம்பலம்
/
முதியோர் இல்லத்தில் குறைபாடு; சட்டப்பணி குழு ஆய்வில் அம்பலம்
முதியோர் இல்லத்தில் குறைபாடு; சட்டப்பணி குழு ஆய்வில் அம்பலம்
முதியோர் இல்லத்தில் குறைபாடு; சட்டப்பணி குழு ஆய்வில் அம்பலம்
ADDED : பிப் 22, 2025 07:12 AM

திருப்பூர்; முதியோர் இல்லத்தில், வசதிகள் குறைவாக இருந்தது, சட்டப்பணிகள் ஆலோசனை குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனை குழு செயலாளர் ஷபீனா தலைமையிலான குழுவினர், திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம் ரோட்டிலுள்ள சிவசர்மிளா முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் நேற்று ஆய்வு நடத்தினர்.
துணை தாசில்தார் அன்பரசு, சட்ட பணிகள் ஆலோசனை குழு வக்கீல்கள் அன்புச்செல்வி, சகாதேவன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் சாய்ஸ்ரீ, சந்தியா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், முதியோர் இல்ல தினசரி பதிவேடு, சமையல் பொருட்களின் தரம், முதியவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை, உறைவிட வசதி, மருத்துவம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குழந்தைகள் மற்றும் முதியோர் உறங்கும் தரமற்ற படுக்கைகள் மற்றும் காற்றோட்டம் இல்லாத அறைகள், காலாவதியான உணவு மற்றும் மருந்து பொருட்கள், போதிய கழிப்பிட வசதியின்மை, பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டப் பணிகள் ஆலோசனைக் குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்த அறிக்கை, மாவட்ட நிர்வாகத்துக்கும், சென்னை ஐகோர்ட்டுக்கும் தாக்கல் செய்யப்படும் என்றனர்.

