/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வானியல் நிகழ்வை கண்டு மகிழ்ச்சி: கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு
/
வானியல் நிகழ்வை கண்டு மகிழ்ச்சி: கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு
வானியல் நிகழ்வை கண்டு மகிழ்ச்சி: கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு
வானியல் நிகழ்வை கண்டு மகிழ்ச்சி: கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு
ADDED : ஜூன் 05, 2024 01:32 AM

உடுமலை;அரிய வானியல் நிகழ்வான 'கோள்களின் அணிவகுப்பை' உடுமலையில் பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், காந்திநகர் மைதானத்தில் அரிய வானியல் நிகழ்வை காண்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதிகாலையில் வானியல் நிகழ்வை பொதுமக்கள் காண்பதற்கு தொலைநோக்கி அமைக்கப்பட்டிருந்தது. உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து, 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொலைநோக்கி வழியாக கோள்களை கண்டு மகிழ்ந்தனர்.
மேலும், சனிக்கோளின் வளையங்கள் தெளிவாக காணப்பட்டதால், மாணவர்கள் அவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு, மொபைல் செயலி வழியாக கோள்களின் நகர்வுகளை பார்வையிடுவது குறித்தும், கோள்களின் அணிவகுப்பு, அவை சூரியனை எவ்வாறு சுற்றுகிறது என்பதையும், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன், அறிவியல் கழக உறுப்பினர்கள் சதீஷ்குமார், ஹரிணி, மதுஸ்ரீ செய்திருந்தனர்.