/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனவிலங்குகள் இடம் பெயர்வு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
வனவிலங்குகள் இடம் பெயர்வு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வனவிலங்குகள் இடம் பெயர்வு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வனவிலங்குகள் இடம் பெயர்வு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஏப் 07, 2024 02:13 AM

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், அரிய வகை மரங்கள், வன விலங்குகள் என, உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது. கடந்த, நான்கு மாதமாக மலைப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வன விலங்குகள் நீர் தேடி, உடுமலை - மூணாறு சாலையை கடந்து, மலையடிவார பகுதிகள், அமராவதி அணை, திருமூர்த்தி அணை பகுதியை நோக்கி வருகின்றன.
போக்குவரத்து அதிகம் உள்ள, புங்கன் ஓடை பாலம், யானைக்காடு, எஸ்.வளைவு, ஏழுமலையான் கோவில் பகுதிகளில், யானைக்கூட்டம் மற்றும் வன விலங்குகள் உலா வருகின்றன.
இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையாக சாலையை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய வன விலங்குகள் நடமாட்டம் உள்ள சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

