நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 37 ஊராட்சிகளிலும், தேசிய வேலை உறுதி திட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; வேலை வழங்காத காலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென, மா.கம்யூ., கட்சி சார்பில், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா குழு உறுப்பினர் மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், தாலுகா செயலாளர் கொளந்தை சாமி, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரகாஷ், காமராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

