/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேச்சுவார்த்தையில் உடன்பாடு கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து
/
பேச்சுவார்த்தையில் உடன்பாடு கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து
பேச்சுவார்த்தையில் உடன்பாடு கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து
பேச்சுவார்த்தையில் உடன்பாடு கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து
ADDED : ஜூலை 08, 2024 10:38 PM
திருப்பூர்:திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் மீது, பாரதீய மின் தொழிலாளர் சங்கம் சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செயற்பொறியாளர் அழைப்பின் பேரில், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
மாநில செயலாளர் கதிர்வேல், திட்ட செயல் தலைவர் பாலகிருஷ்ணன், திட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பூபதி, கோட்ட தலைவர் ராஜேஸ்குமார், கோட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
தற்காலிக பணியிட மாறுதல் முற்றிலும் ரத்து செய்யப்படும்; அவரவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், நிரந்தர பணியிடத்தில் பணி ஏற்க உத்தரவிடப்படும். இனிவரும் நாட்களில், வாரிய உத்தரவின்படி தற்காலிக இடமாற்றம் செய்வதாக இருந்தால், உரிய வழிமுறைகள் பின்பற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், வெளிமாவட்டங்களுக்கு பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள் விடுவிப்பு, இனிவரும் நாட்களில், முதன்மை அடிப்படையில் பணி விடுப்பு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
உடன்பாடு ஏற்பட்டதால், இன்று நடப்பதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக, பாரதி மின் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.