/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் வேர் வாடல் நோய் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
/
தென்னையில் வேர் வாடல் நோய் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தென்னையில் வேர் வாடல் நோய் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தென்னையில் வேர் வாடல் நோய் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ADDED : ஏப் 29, 2024 01:20 AM

உடுமலை;தென்னையில் வேர் வாடல் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில், இடுபொருட்கள் மற்றும் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்னையில், கேரள வேர் வாடல் நோய் அதிகளவு தாக்கி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகள் தென்னப்தோப்புகளில் செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டு வருகிறது.
வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக, குடிமங்கலம் வட்டாரம் மூங்கில் தொழுவு கிராமத்தில், 5 விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு, வேளாண் பல்கலை வாயிலாக, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பேசில சப்சிலர்ஸ் விரிடி, வேம்பு மற்றும் தென்னை டானிக், கொக்கோகான் ஆகிய இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்தும் முறை குறித்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் விளக்கினார். தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜசேகரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

