/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு குளறுபடி கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம்
/
'நீட்' தேர்வு குளறுபடி கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம்
'நீட்' தேர்வு குளறுபடி கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம்
'நீட்' தேர்வு குளறுபடி கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 15, 2024 12:06 AM

உடுமலை:உடுமலையில், 'நீட்' தேர்வு குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கு 'நீட்' என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
இந்நிலையில், நடந்து முடிந்த 'நீட்' தேர்வில் குளறுபடிகளை கண்டித்தும், 'நீட்' தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் ஆதர்ஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார், இ.கம்யூ., ரனதேவ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.