/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பற்களின் பாதுகாப்பு மருத்துவர் விளக்கம்
/
பற்களின் பாதுகாப்பு மருத்துவர் விளக்கம்
ADDED : செப் 07, 2024 12:10 AM
திருப்பூர்:பற்களை ஆயுட்காலம் முழுவதும் நன்றாக வைத்துக்கொள்ள சுந்தரம் பல் மருத்துவமனை முதன்மை மருத்துவர் ராஜேஷ் கூறும் எளிய வழிமுறைகள்:
தினமும் இரண்டு முறை தவறாமல் பல் துலக்கவேண்டும். வாரம் மூன்று முறையேனும் மவுத்வாஷ் பயன்படுத்தி, வாய் கொப்பளிக்க வேண்டும். இதற்கு மாற்றாக, சிறிது கல் உப்பு கலந்து வெது வெதுப்பான நீரில் தினமும் வாய் கொப்பளிக்கலாம்.
பற்பசை கொண்டு ஈறுகளை மசாஜ் செய்வது, அவற்றை வலுப்படுத்துகிறது. டூத் பிரஷை, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மாற்றவேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள பல் மருத்துவரை அணுகி, ஆலோசனைகளும், தேவைப்பட்டால் உரிய சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
சுந்தரம் மருத்துவமனை, 20ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. குழந்தைகள் சிறப்பு பல் மருத்துவம், செயற்கை பல் பதியம் என்கிற பல் மாற்று சிகிச்சை, நவீன பல் வரிசை சீரமைப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ஓ.பி.ஜி., எக்ஸ்ரே வசதியும் உள்ளது. இன்ட்ரா ஓரல் ஸ்கேனர் உதவியுடன், எளிமையான முறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல் சுத்தம் செய்தல், வேர் சிகிச்சை, செயற்கை பல் கட்டுதல் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய, 73393 39108 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.