/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
/
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 01, 2024 01:51 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், துணை தாசில்தார்கள் 14 பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் கார்த்திக்குமார், திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும்; அங்கிருந்த செந்தில்குமார் தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அவிநாசி தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் சாந்தி ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராகவும்; அங்கிருந்த சரவணகுமார், திருப்பூர் மாநில நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பெரியசாமி, பல்லடம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும்; அங்கிருந்த சுப்பிரமணியம், டாஸ்மாக் உதவி மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் ராதா, அதே அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் - 2 ஆகவும்; தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்பிரபு மண்டல துணை தாசில்தார் - 1 ஆகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
காங்கயம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் கோபால் தாராபுரத்துக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக செல்கிறார். உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேந்திரபூபதி, மடத்துக்குளத்துக்கு மண்டல துணை தாசில்தாராகவும்; அங்கு பணிபுரியும் பாரதிராஜா, அமராவதி சர்க்கரை ஆலை துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார், உடுமலைக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக செல்கிறார். கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் அம்பிகா பல்லடம் வட்ட வழங்கல் அலுவலராகவும்; தாராபுரம் மண்டல துணை தாசில்தார் -2 சுந்தரமூர்த்தி, காங்கயம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.