/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு உழவர் சந்தை ரூ.3 கோடியில் மேம்பாடு
/
தெற்கு உழவர் சந்தை ரூ.3 கோடியில் மேம்பாடு
ADDED : ஜூலை 08, 2024 11:09 PM
திருப்பூர்:வருவாயை பெருக்கி தரும் உழவர் சந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்படுகிறது. குறிப்பாக, புதிய கடைகள் கட்டுதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு, வெளிப்புற, உள்வளாக சுற்றுச்சுவர், இன்றியமையாத தேவைகளை உருவாக்குதல் போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மாதம் நடந்த சட்டசபையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மானிய கோரிக்கையின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அதிக காய், கனி வரத்துடன் செயல்படும், 20 உழவர் சந்தைகள் மூன்று கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் டாப் 3 சந்தைகள் பட்டியலில் திருப்பூர், ஓசூர், ஒட்டன்சத்திரம் உள்ளது. அதிக பட்ச தக்காளி வரத்தால், தெற்கு உழவர் சந்தை, பிற சந்தைகளை விட, கூடுதலான (65 முதல் 70 டன்) காய்கறி வரத்து வந்துள்ளது.
தினமும் சராசரியாக, ஒன்று முதல், 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. வருவாய் மற்றும் வரத்தில் தொடர்ந்து முதல் இடத்தில் திருப்பூர் இருப்பதால், திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு விரைவில், மூன்று கோடி ரூபாய் வேளாண் வணிகத்துறையால் கிடைக்க உள்ளது.