ADDED : ஜூலை 19, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் ஊராட்சி, ஐயமுத்தையன்காடு பகுதியில் அரசின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு குறித்தும், செங்கப்பள்ளி ஊராட்சி, சென்னிமலை பாளையத்தில் சாலை வசதி, வெள்ளியம்பதியில் கட்டி வரும் துணை சுகாதாரம் நிலையம். குன்னத்துாரில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டடம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து குன்னத்துார் ஏரி பகுதியில் கலெக்டர் கிறிஸ்துராஜ்ஆய்வு நடத்தினார்.
பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டம், நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.