/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு குண்டம் இறங்கிய பக்தர்கள்
/
ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு குண்டம் இறங்கிய பக்தர்கள்
ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு குண்டம் இறங்கிய பக்தர்கள்
ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு குண்டம் இறங்கிய பக்தர்கள்
ADDED : ஜூலை 31, 2024 12:24 AM

திருப்பூர்;திருப்பூரின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் ஸ்ரீசெல்லாண்டியம்மன், நொய்யல் கரையின் தென்கரையில், வடக்குநோக்கி அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
கோவிலில், 18ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விரதம் இருந்து, காப்புக்கட்டிய பக்தர்கள், பக்தி பரசவத்துடன் குண்டம் இறங்கினர்.
குண்டம் திருவிழா, கடந்த, 23ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று குண்டம் திறப்பு விழா நடந்தது. பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, குண்டத்தில் அக்னி வார்க்கப்பட்டது. நேற்று அதிகாலை, 6:00 மணி முதல், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
பூசாரி மற்றும் அருளாளர்கள், சிறப்பு பூஜைகள் செய்து, குண்டம் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பக்தி பரவசத்துடன், 'ஓம் சக்தி... பராசக்தி' என்று கோஷமிட்டபடி, குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீர் விழாவும், ஆக., 8ம் தேதி மறுபூஜை மற்றும் ப்ரத்தியங்கிரா தேவி அலங்கார பூஜையும் நடக்க உள்ளது.
---
செல்லாண்டியம்மன் ஆடிக்குண்டம் திருவிழாவில், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
---
ஆடிக் குண்ட விழாவில்...
திருப்பூர், செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
---
ஆடிப்பூர விழாவில்...
திருப்பூர் திருப்பதி கோவிலில் நடந்து வரும், திருப் பவித்ரோத்ஸவம் விழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள்.