/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஆக 04, 2024 11:18 PM

அவிநாசி: ஆடி அமாவாசையையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பக்தர்கள் கோவில் ராஜகோபுர நுழைவாயில் முன்பாகவும், தீபஸ்தம்பத்தின் அருகிலும் தங்கள் செருப்புகளை கழற்றி விட்டு சென்றனர். வெளி பிரகாரம் முழுவதுமாக ஆங்காங்கே செருப்புகள் சிதறி கிடந்தன.
பக்தர்கள் கூறுகையில், ''செருப்புகள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு என தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியர்கள் தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் தங்கள் செருப்புகளை உரிய அறையில் விட்டு டோக்கன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கோவில் வளாகம் துாய்மையாகவும் தெய்வீகமாகவும் காட்சியளிக்கும்'' என்றனர்.