/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முளைப்பாரியுடன் அம்மனை தரிசித்த பக்தர்கள்
/
முளைப்பாரியுடன் அம்மனை தரிசித்த பக்தர்கள்
ADDED : ஏப் 29, 2024 01:46 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், ராமகிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது.
இதன் 49ம் ஆண்டு விழா கடந்த 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
அங்கு கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து கும்மி அடித்து அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர் வலமாக வந்தனர்.
இன்று மாலை பூவோடு எடுத்தல், 30ம் தேதி மாலை மாரியம்மன் அழைத்தல், மே மாதம் முதல் தேதி அதிகாலை மாவிளக்கு ஊர்வலம், 2ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

