/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் சென்டர்மீடியன் வைக்க எதிர்பார்ப்பு
/
தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் சென்டர்மீடியன் வைக்க எதிர்பார்ப்பு
தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் சென்டர்மீடியன் வைக்க எதிர்பார்ப்பு
தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் சென்டர்மீடியன் வைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 06, 2024 02:32 AM
உடுமலை;தேசிய நெடுஞ்சாலையை மாணவ, மாணவியர் பாதுகாப்பாக கடக்கும் வகையில், சென்டர்மீடியன் அமைத்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், நகரின் வழியாகவே பிற பகுதிகளுக்குச்செல்ல முடியும்.
எனவே, அதிக நெரிசல் நீடித்து வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக, கொழுமம் ரோடு சந்திப்பு முதல், பஸ் ஸ்டாண்ட் வரையும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கொல்லம்பட்டரை வரை, தேசிய நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது.
ஆனால், கொழுமம் ரோடு சந்திப்பு முதல், பெரியகோட்டை பிரிவு வரை, அதிக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
குறிப்பாக, அங்குள்ள, பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும், மாணவ, மாணவியர், காலை, மாலை நேரங்களில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்; வாகன ஓட்டுநர்களும் திணறுகின்றனர்.
நெடுஞ்சாலையில், வாகனங்கள் அதிவேகமாக வருவதால், ரோட்டை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்; சைக்கிளில் செல்லும், மாணவ, மாணவியரும் பதட்டத்துடன் ரோட்டை கடக்க வேண்டியுள்ளது.
அப்பகுதியில், ரோட்டோரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதையும் பராமரிப்பில்லாமல், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதசாரிகளும் ரோட்டோரத்திலேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, கொழுமம் ரோடு சந்திப்பு முதல் பெரியகோட்டை பிரிவு வரை, தேசிய நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் அமைத்தால், மாணவ, மாணவியர் பாதுகாப்பாக அப்பகுதியை கடந்து செல்ல முடியும்.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.