/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பான ரோந்து பணி போலீசுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு
/
சிறப்பான ரோந்து பணி போலீசுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு
ADDED : ஜூலை 23, 2024 11:13 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்தில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய ரோந்து போலீசாரை கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் பாராட்டினார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஸ்டேஷன் வாரியாக இரவு ரோந்து பணியில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் ரோந்து பணியின் போது, வழிப்பறி, திருட்டு, குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும், கஞ்சா கடத்திய நபர்களை ரோந்து போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக சிறப்பாக பணியாற்றிய பல்லடம் ஸ்டேஷன் ஸ்ரீதர், ஆனந்த், பிரசன்னகுமார், உடுமலை முருகவேல், காங்கயம் சதாம் உசேன், ஊத்துக்குளி பாலு, சதீஷ்குமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் அருள்ராஜா ஆகியோரை கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் பாராட்டி, பணம் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.