/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாழடையும் வேளாண் அலுவலர் குடியிருப்பு
/
பாழடையும் வேளாண் அலுவலர் குடியிருப்பு
ADDED : மே 03, 2024 01:24 AM

திருப்பூர்:திருப்பூர் - விஜயாபுரம், அவிநாசியில், சேவூர் சாலை, கருவலுார் உள்ளிட்ட இடங்களில், வேளாண் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. துவக்க காலத்தில், இக்குடியிருப்புகளில், வேளாண் அலுவலர்கள் வசித்து வந்துள்ளனர்.
நாளடைவில், யாரும் தங்காததால், குடியிருப்புகள் பயன்பாடின்றி போயின. இதை தெரிந்து கொண்ட சமூக விரோதிகள் சிலர், மது அருந்துவது, சீட்டாடுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வேளாண் அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ஊராட்சி பகுதிகளில், வேளாண் அலுவலர்கள் தங்கி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தான், பல லட்சம் ரூபாய் மதிப்பில் இக்குடியிருப்புகள் கட்டப்பட்டன; தற்போது அவை பயனற்று கிடக்கின்றன.
காலப்போக்கில், அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்படவும் வாய்ப்புண்டு. எனவே, குடியிருப்புகளை பராமரித்து, மீண்டும் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நுாலகம், சுகாதார நிலையம், தபால் நிலையம் என, அந்தந்த பகுதி மக்களின் தேவைக்கேற்ப, மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.