/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுதினம் துவங்குகிறது
/
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுதினம் துவங்குகிறது
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுதினம் துவங்குகிறது
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுதினம் துவங்குகிறது
ADDED : மார் 28, 2024 05:10 AM
திருப்பூர், : மேல்நிலைப்பள்ளி தேர்வு முடித்து, அடுத்த என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம். வாழ்வை சிறப்பாக்கும் உயர்கல்வி எது என்பதை தேட மாணவ, மாணவியர், பெற்றோர் சுறுசுறுப்புடன் தயாராகி வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அள்ளி வழங்க 'தினமலர்' நாளிதழ் சார்பில், தாராபுரம் ரோடு, வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில், வரும், 30, 31ம் தேதி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நாளை மறுதினம் துவங்கும் நிகழ்வை, 'தினமலர்' நாளிதழுடன், கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து நடத்துகிறது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என இரு பிரிவுகளாக நிகழ்ச்சி நடக்கிறது. கல்லுாரிகள், முன்னணி பல்கலைக்கழக அரங்குகள் என, 70க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
'கரியர் கவுன்சிலிங்' குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின், 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி, டாக்டர் டில்லி பாபு, 'சி.ஏ., படிப்பும் பிரகாசமான எதிர்காலமும்' எனும் தலைப்பில் ராஜேந்திரகுமார், 21ம் நுாற்றாண்டு திறன்கள் எனும் தலைப்பில் உதயகுமார் உள்ளிட்டோர் பேச உள்ளனர்.
பரிசை வெல்லுங்க!
இரண்டு நாட்களும் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை நிகழ்வுகள் நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், www.kalvimalar.com என்ற இணையதளத்திலோ அல்லது 91505 74442 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ, ஹாய் என மெசேஜ் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்; இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம்.
கருத்தரங்களில் மாணவர்களிடம் கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு விடையளித்து, லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளையும் தட்டி செல்லலாம்.