/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏமாற்றங்கள் - 4 தலைவிரித்த தண்ணீர் பஞ்சம்
/
ஏமாற்றங்கள் - 4 தலைவிரித்த தண்ணீர் பஞ்சம்
ADDED : ஜூன் 25, 2024 12:38 AM

அவிநாசி ஒன்றியம், தத்தனுார் ஊராட்சி தலைவர் விஜயகுமார் தலைமையில், துணை தலைவர் கிரிஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊராட்சி தலைவர் கூறுகையில், இங்கு வசிக்கும் 5 ஆயிரம் மக்களுக்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய குடிநீர் திட்டத்தில், நாளொன்றுக்கு 2.25 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவேண்டும். ஆனால், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்குகின்றனர்.
708 புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. வழியோர கிராமங்களுக்கு, முறைகேடாக தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், கடைநிலையில் உள்ள தத்தனுாருக்கு, புதிய திட்டத்தில் இதுவரை, ஒரு லிட்டர் குடிநீர் கூட வழங்கப்படவில்லை. புதிய திட்டத்தில் ஊராட்சிக்கு தினமும் மூன்றரை லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.