/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலம்பட்டி சுங்கச்சாவடி விவகாரம் ;அதிகாரிகளின் நிலைப்பாட்டில் அதிருப்தி
/
வேலம்பட்டி சுங்கச்சாவடி விவகாரம் ;அதிகாரிகளின் நிலைப்பாட்டில் அதிருப்தி
வேலம்பட்டி சுங்கச்சாவடி விவகாரம் ;அதிகாரிகளின் நிலைப்பாட்டில் அதிருப்தி
வேலம்பட்டி சுங்கச்சாவடி விவகாரம் ;அதிகாரிகளின் நிலைப்பாட்டில் அதிருப்தி
ADDED : மார் 22, 2024 11:01 PM
திருப்பூர்:'வேலம்பட்டி சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக, அதிகாரிகளின் நிலைபாடு ஏற்புடையதல்ல' என, வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலம்பட்டி சுங்கசாலை எதிர்ப்பு இயக்கம், நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி கூறியதாவது:
வேலம்பட்டி சுங்கச்சாவடி தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு கழக திட்ட இயக்குனர் அளித்துள்ள விளக்கம், ஏற்புடையது அல்ல. அவிநாசி - அவிநாசிபாளையம் சாலை, சுங்கச்சாவடி வசூலிக்க தகுதியில்லாத சாலை என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தையில் தெரிவித்துள்ளோம்; அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம்.
இந்த சாலையில், மாவட்ட மருத்துவமனை எதிரில், ரோட்டின் இரு புறமும், கழிவுநீர் கால்வாய் தொடர்ச்சியாக கட்டப்படாமல், பாதியில் விடுபட்டுள்ளது; இதனால், அதில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கே.செட்டிபாளையம் பகுதி முழுக்க ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் முன்பிருந்த நிலைமையிலேயே, குறுகிய நிலையில், இரு வழிச்சாலையாகவே உள்ளது.
கே.செட்டிபாளையம் சரவணமஹால் எதிரிலும், புது ரோடு பிரிவு அருகிலும், மின் கம்பம் அகற்றப்படாமல் ரோட்டின் மீதே உள்ளது. அந்த இடத்தில் ஒரு வாகனம் மட்டும் தான் செல்ல முடியும். கே.செட்டிபாளையம் முதல், கோவில் வழி வரை, ரோட்டோரம் மின் கம்பம் அகற்றப்படவில்லை. இதனால், ரோட்டோரம் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் வளைந்தும், நெளிந்தும் கட்டப்பட்டுள்ளது; இதனால், கழிவுநீரில் சாக்கடை நீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஏஞ்சல் கல்லுாரி எதிரில் பெரிய பள்ளம் ஒன்று ரோட்டை கடக்கிறது. பள்ளத்தை கடக்க, மேம்பாலம் கட்டப்படாமல், ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் மழையின் போது, ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுக்கும்; வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற குறைகளை சரி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேம்பாட்டு கழக திட்ட இயக்குனருக்கு மனு வழங்கியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

