/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகம்
/
துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகம்
துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகம்
துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகம்
ADDED : மே 31, 2024 12:00 AM

உடுமலை;உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.பள்ளிகள் திறக்கும் நாளில் வழங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதிலுள்ள பள்ளிகளில் கடந்த, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஏப்., 26ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறைக்குப்பின்,பள்ளிகள் ஜூன் 6ம் தேதி முதல் துவங்குகிறது.புதிய கல்வியாண்டு, 2024 - 25ன் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
உடுமலை வட்டாரத்தில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மொத்தமாக துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 118 உள்ளன. இதில், 7,500 மாணவர்கள் படிக்கின்றனர்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், 64 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 3,240 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், பள்ளிகளுக்கு நேரடியாக புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பள்ளி திறக்கும் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்க, தயாராக வைத்திருப்பதற்கு பள்ளிகளுக்கு கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்களும், பள்ளிகள் திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.