/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்னணு பணபரிவர்த்தனையில் இடுபொருள்கள் வினியோகம்
/
மின்னணு பணபரிவர்த்தனையில் இடுபொருள்கள் வினியோகம்
ADDED : செப் 10, 2024 02:31 AM
திருப்பூர்:திருப்பூர் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மின்னணு பணபரிவர்த்தனை மூலம் இடுபொருள்கள்பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் வட்டாரத்தில் தற்போது இறவை ஆடிப்பட்டம் முடிவடைந்து நிலக்கடலை பயிரானது அறுவடைக்கு தயாராக உள்ளது. வரும் புரட்டாசி பட்டத்தில் பயறுவகை பயிர்கள், நிலக்கடலை விதை, கம்பு, சோளம் பயிர் விதைப்பு செய்ய ஏதுவாக வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் திருப்பூர் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை ஏ.டி.எம்., கார்டு மற்றும் மின்னணு வசதிகள் கொண்ட பணிமல்லா பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று திருப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகி தெரிவித்துள்ளார்.

