/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் வினியோக பணிகள் தீவிரம்
/
பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் வினியோக பணிகள் தீவிரம்
பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் வினியோக பணிகள் தீவிரம்
பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் வினியோக பணிகள் தீவிரம்
ADDED : மே 27, 2024 11:46 PM

உடுமலை:உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளன.
புதிய கல்வியாண்டு, 2024 - 25 ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி பள்ளிகளில் ஆயத்தப்பணிகளை மேற்கொள்வதற்கும், வகுப்பறை, பள்ளி வளாகம் துாய்மையாக பராமரிக்கவும், மின்சார வினியோகம் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, பள்ளியை தயாராக வைத்திருக்க கல்வித்துறை வழிமுறை வழங்கியுள்ளது.
மேலும், கல்வியாண்டு துவங்கிய முதல் நாளில், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, உடுமலை சுற்றுப்பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட கல்வித்துறையின் சார்பில் புத்தகங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, அவற்றை வினியோகிப்பதற்கு பாடபுத்தகங்களை பிரித்து வைக்கும் பணிகளை, பள்ளி ஆசிரியர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள் திறக்கும் நாளை மாணவர்கள், ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.