/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட பால்பேட்மின்டன் சப்-ஜூனியர் அணி தேர்வு
/
மாவட்ட பால்பேட்மின்டன் சப்-ஜூனியர் அணி தேர்வு
ADDED : ஆக 11, 2024 11:09 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட பால்பேட்மின்டன் கழகம் சார்பில், சப்-ஜூனியர், வீரர் தேர்வு, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் பாலகுமார் போட்டிகளை துவக்கி வைத்தனர். தேர்வுத்திறன் போட்டியில், மாவட்டம் முழுதும் இருந்து, 94 மாணவர், 82 மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தேர்வுக்குழு உறுப்பினர் அருண், லோகநாதன் ஆகியோர் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் தலா, 12 பேர் வீதம், 24 பேரை தேர்வு செய்தனர். இவர்கள் ஆக., இறுதியில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில் நடக்கும் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
----
திருப்பூர் மாவட்ட பால்பேட்மின்டன் கழகம் சார்பில், சின்னசாமியம்மாள் பள்ளியில், சப் -ஜூனியர் வீரர், வீராங்கனையர் தேர்வு நடந்தது. தங்கள் திறனை காட்டிய வீராங்கனையர்.