/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவிலான கராத்தே; வித்ய நேத்ரா பள்ளி வெற்றி
/
மாவட்ட அளவிலான கராத்தே; வித்ய நேத்ரா பள்ளி வெற்றி
ADDED : ஆக 21, 2024 11:46 PM

உடுமலை : மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வித்யநேத்ரா பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
உடுமலையில் கொஜூரியோ கராத்தே அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் நந்த கோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், கராத்தே பயிற்றுனர் மணிமாறன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.