/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சிலம்பாட்ட போட்டி:முத்தமிழ் சிலம்ப மாணவர் அசத்தல்
/
மாவட்ட சிலம்பாட்ட போட்டி:முத்தமிழ் சிலம்ப மாணவர் அசத்தல்
மாவட்ட சிலம்பாட்ட போட்டி:முத்தமிழ் சிலம்ப மாணவர் அசத்தல்
மாவட்ட சிலம்பாட்ட போட்டி:முத்தமிழ் சிலம்ப மாணவர் அசத்தல்
ADDED : ஆக 20, 2024 10:41 PM
திருப்பூர்:தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட (தொடுபுள்ளி முறை) விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன.
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பொதுப்பிரிவு என, 3 பிரிவுகளில், மாணவ, மாணவியரின் எடை மற்றும் உயரம் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில், 10 குழுவினர் பங்கேற்றனர். இதில், கோல்டன் நகர் முத்தமிழ் சிலம்ப பயிற்சியாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை அள்ளினர்.மாணவி ஹர்ஷனா (இன்பான்ட் ஜீசஸ் பள்ளி), திருக்குமரன் (அமுதா பள்ளி), சரண் (விநாயகா விகாஸ்), குருஷிகா (ஜெய்வாபாய் பள்ளி), பென்சியா (பாப்பநாயக்கன்பாளையம் அரசுப்பள்ளி), மோகன்பாபு (தொட்டியமண்ணரை அரசுப்பள்ளி), பிரேம்குமார் (கோல்டன் நகர் அரசு நடுநிலைப்பள்ளி), கண்மணி.
சுவாதிமோல் (புதுராமகிருஷ்ணாபுரம் அரசு பெண்கள் பள்ளி), ஹரிஹரசுதன், கதிர்செல்வன், கனிஷ்க் (சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), ரித்துராஜ் (பிஷப் உபகாரசாரமி பள்ளி), பத்நாபன் (கே.எஸ்.சி., அரசுப்பள்ளி) என, 14 மாணவ, மாணவியர், பங்கேள்ள பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்றிடம் பிடித்தனர். முத்தமிழ் சிலம்ப பயிற்சிக்குழு, மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றது.