/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட பேச்சு போட்டி குமுதா பள்ளி சாதனை
/
மாவட்ட பேச்சு போட்டி குமுதா பள்ளி சாதனை
ADDED : ஜூன் 30, 2024 02:04 AM

திருப்பூர்;முன்னாள் முதல்வர் காமராஜர், 122வது பிறந்த நாள் விழா, என்.எம்.எஸ்., கல்வி திருவிழா முன்னிட்டு, ஈரோடு மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இதில், பங்கேற்ற நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவி, மேகவர்ஷினி முதலிடம், கவிதர்ஷினி 2ம் இடம், மற்றொரு பிரிவில், ஆறாம் வகுப்பு மாணவி தனுஷ்யா, 3ம் இடம், 8ம் வகுப்பு மாணவர்கள் ரிஷிக் ஆர்யா, கவுசிமா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விருதுநகரில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி அரவிந்தன், பள்ளி முதல்வர் மஞ்சுளா உட்பட பலர் பாராட்டினர்.