/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., - பா.ஜ., மீது அ.தி.மு.க., வேட்பாளர் சாடல்
/
தி.மு.க., - பா.ஜ., மீது அ.தி.மு.க., வேட்பாளர் சாடல்
தி.மு.க., - பா.ஜ., மீது அ.தி.மு.க., வேட்பாளர் சாடல்
தி.மு.க., - பா.ஜ., மீது அ.தி.மு.க., வேட்பாளர் சாடல்
ADDED : ஏப் 13, 2024 12:47 AM

பொங்கலுார்:கோவை அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பொங்கலுார் அடுத்த கோவில்பாளையத்தில் நேற்று ஓட்டு சேகரித்து பேசியதாவது:
தி.மு.க., குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்திற்கு செய்கிறார்கள். தி.மு.க., எதுவுமே செய்ய வில்லை என்று சொல்ல முடியாது. தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், பால் விலை, சாலை வரி போன்றவற்றை உயர்த்தி இருக்கிறார்கள்.
பா.ஜ., சிலிண்டர் விலை, பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளனர். என்னை வெற்றி பெற செய்தால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களை போராடி பெற்றுத் தருவேன்.
இவ்வாறு, ராமச்சந்திரன் பேசினார்.
அவருடன் பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.